ஓம்! மண்மங்கலம் வாழ்பவளே,
மண்ணுலகில் நிறைந்தவளே,
தர்மத்தை காப்பவளே,
தரணியை ஆளும் அன்னையே!
வான்புகழ் கொண்டவளே,
கருணை உள்ளம் கொண்டவளே,
பாவத்தை போக்கும் பரமநாயகி,
பக்தர்குறை தீர்க்கும் தாயே!
வெண்டுவன் காரிகுலம் காக்கவளே,
மங்களம் தரும் மண்மங்கலம்
புதுக் காளி தாயே போற்றி! போற்றி!
ஓம்! மூங்கில் வனத்தானே!
முப்பொழுதும் உம் அருளால் காப்பவனே!
நோக்காரின் நோய் நொடிகளை நீக்குவனே!
நீதி நிலைநாட்டி,
வெண்டுவன் காரி வாழ்வு வளம் பெருக்கி,
காக்கும் எங்கள் புது சங்கிலி கருப்பண்ண சாமியே!
போற்றி! போற்றி!!
🎵 புதுகாளியம்மன் துதி பாடல்கள் 🎵